கமலுக்கு வில்லனாகிறாரா சத்யராஜ் ?... நெருக்கடியில் மாட்டிக்கொண்ட ஷங்கர் !

indian 2

‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. முதல் பாகத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

indian 2

இதையடுத்து கடந்த மாத தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. திருப்பதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. அதாவது கமல் நடிக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டது. 

indian 2

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்தார். இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஆனால் படத்தில் நடிக்க 10 கோடி வரை கேட்டதாகவும், அதனால் ஷாக்கான இயக்குனர் ஷங்கர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

 

Share this story