செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’ ரிலீஸ் எப்போது ?.. வெளியான புதிய தகவல் !
செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக் காயிதம்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி இயக்குனராக செல்வராகவன், தற்போது நடிகராக அறிமுகமாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சாணிக் காயிதம்’. இந்த திரைப்படத்தை ராக்கி படத்தின் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ்-ம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் இணைந்து வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முதல்முறையாக செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் வித்தியாசமாக போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் முதல் வாரம் அமேசான் பிரைம் ஓடிடித்தளத்தில் வெளியாக உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

