நேருக்கு நேர் மோத தயாரான செல்வராகவன், தனுஷ் – அண்ணனா? தம்பியா?

திரைத்துறையில் பல ஹிட் அண்ணன் தம்பி காம்போக்களை பார்த்திருப்போம் , அதில் பலருக்கும் விருப்பமான ஓரு காம்போ தனுஷ், செல்வராகவன். அந்த வகையில் கசியாக இவர்களது கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘நானே வருவேன்’, இதனை தொடர்ந்து தற்போது இந்த இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம் அடுத்தமாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போன்று செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளை மையமாக வைத்து தயாராகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள மோகன் ஜி படத்தை அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.