மனைவியுடன் விவாகரத்தா ?.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன் !

selvaraghavan

தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் செல்வராகவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியிருந்தார். இதுதவிர சமீபகாலமாக நடிகராக கலக்கி வருகிறார். 

selvaraghavan

இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் குறுகிய காலத்திலேயே கருத்து வேறுப்பட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை செல்வராகவன் விவாகரத்து செய்யுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு காரணம் சமீபகாலமாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் தான். ஆனால் அது வெறும் வதந்தி என்று நிரூபிக்கும் வகையில் தனது மனைவி இருக்கும் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். புத்தாண்டையொட்டி தனது இன்ஸ்டாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Share this story