'செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷூட்' - இணையத்தில் கலக்கும் நடிகர் கூல் சுரேஷ்

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான சாக்லேட் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கூல் சுரேஷ். இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் காமெடி ரோல்களிலும் ,நெகட்டிவ் ரோல்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து நடிகர் கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போக நடிகர் சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் அவருக்கு வாய்ப்பு வழங்கி வந்தனர். சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகியும் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூல் சுரேஷ் மிகவும் வருத்தப்படுவதுண்டு.
அதேபோல வறுமையில் உள்ளதாகவும் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கூறியிருந்தார். இதனிடையே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு விமர்சனம் கூறி வந்த கூல் சுரேஷ் நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு என்று இவர் சொல்லும் டயலாக் பிரபலமான நிலையில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகும் என்று அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த சூழலில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நடிகர் கூல் சுரேஷுக்கு அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வருவதாக நடிகர் சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் ஹீரோ போல செம ஸ்டைலிஷ் ஆக மாறி போட்டோ சூட் ஒன்றை எடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் நடிகர் கூல் சுரேஷுக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.