சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

tn

சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா.  திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வந்த சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.  இதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார். இருப்பினும் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை.

tn

இந்த சூழலில் நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் உருவாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கிறது . இப்படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கியுள்ளார்.  மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.



அத்துடன் இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு,, கௌதமி அதிதி பாலன் ,அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ் , மதுபாலா உள்ளிட்ட நடித்துள்ளனர்.  இந்நிலையில் சாகுந்தலம் திரைப்படம் வருகிற நவம்பர்4ம் தேதி வெளியாக இருப்பதாக  பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சமந்தா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story