நானே அசிங்கமா பேச சொல்வேனா??.. இது சரியல்ல.. - சதீஷுக்கு பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா..

நானே அசிங்கமா பேச சொல்வேனா??.. இது சரியல்ல..  - சதீஷுக்கு பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா..

ஆடை பிரச்னை குறித்து நடிகர் சதீஷ் வெளியிட்ட விளக்கத்திற்கு நடிகை தர்ஷா குப்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.   

 சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் சன்னி லியோனுடன்,  சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில்  நடைபெற்றது.   இந்த விடாவில்  சன்னி லியோன், தர்ஷா குப்தா,  சதீஷ் , ஜி.பி.முத்து   உட்பட படக்குழுவினர்  கலந்து கொண்டனர்.
 நானே அசிங்கமா பேச சொல்வேனா??.. இது சரியல்ல..  - சதீஷுக்கு பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா..
இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ், மும்பையிலிருந்து வந்திருந்த சன்னி லியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார் என்றும்,   கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்துள்ளார் என்று கிண்டல் செய்தவாறு ஒப்பிட்டு பேசினார்.  நடிகர் சதீஷ்  ஆடை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.   இயக்குனர் நவீன், சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதனையடுத்து நடிகர் சதீஷ் விளக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில், “அது எதார்த்தமாக தனக்கும் தர்ஷா குப்தாவுக்கும் நடந்த உரையாடலே, தவிர பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று தான் கூறவில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த உடையையும் உடுத்துவது அவர்கள் சுதந்திரம்” என்றும்,  தர்ஷா குப்தா அவர்களின் அனுமதியுடன் தான் நகைச்சுவைக்காக பேசினேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

dharsha

இந்நிலையில் நடிகர் சதீஷ்  வீடியோவிற்கு மறுப்பு தெரிவித்து,  நடிகை தர்ஷா குப்தா ட்வீட் போட்டுள்ளார். அதில், “ சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? இது மிகவும் விசித்திரமாக உள்ளது.  யாராவது அவர்களைப் பற்றி அவர்களே மேடையிலே அசிங்கமாக பேச சொல்வார்களா?, அன்று நீங்கள் பேசியது  எனக்கும்   வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நான் அதை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி மாற்றி சொல்வது சரியல்ல ” என்று  வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.  


 


 

Share this story