பிரம்மாண்ட படத்தில் ஷங்கருடன் இணையும் பாலிவுட் நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வேள்பாரி !

VELPARI

 ஷங்கரின் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சமீபகாலமாக இதிகாச மற்றும் வரலாற்று திரைப்படங்களை படமாக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோன்று புகழ்பெற்ற நாவல்களும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை ஷங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

ranveer singh

இந்த படத்தில் நடிகர் சூர்யா பாரியாக நடிக்கவுள்ளதாகவும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. 

ranveer singh

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து கேஜிஎப் ஹீரோ யாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வேள்பாரியாக ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

Share this story