'பத்து தல' இராவணனாக சிம்பு... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

pathuthala

சிம்புவின் 'பத்து தல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

 pathuthala

இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘சில்லன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story