‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த சிவ ராஜ்குமார்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

jailer
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

jailer

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். கடந்த இரண்டு மாதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடிகர் சிவ ராஜ்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து சிவ ராஜ்குமார் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு 5 நாட்கள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  


 

Share this story