விரைவில் வருவேன்... பரதநாட்டிய புகைப்படத்தை வெளியிட்ட சிவாங்கி !

Sivaangi Krishnakumar
 நடிகை சிவாங்கி பகிர்ந்த பரதநாட்டிய புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. 

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வந்தாலே அவர்கள் பிரபலமான நட்சத்திரங்களாகி விடுகின்றனர். இதற்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை உதாரணமாக கூறவேண்டும். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் சிவாங்கி. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் சிவாங்கி. 

Sivaangi Krishnakumar

அதன்பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி செய்த சேட்டைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பிரபலத்தால் சிவாங்கிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். இதையடுத்து நெஞ்சுக்கு நீதி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதோடு புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.   

Sivaangi Krishnakumar

இந்நிலையில் பரதநாட்டியம் ஆடும் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சிவாங்கி வெளியிட்டுள்ளார். அதோடு கேப்ஷனான ‘விரைவில் வருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். சிவாங்கி என்ன சொல்ல வருகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிவாங்கியின் இந்த பரதநாட்டியம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

Share this story