சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஸ்பெஷல் போஸ்டர்.. புத்தாண்டையொட்டி வெளியீடு !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரின்ஸ்’ போதிய வெற்றியை பெறவில்லை. அதனால் தனது அடுத்தமான ‘மாவீரன்’ படத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.