ஓடிடி ரிலீசுக்கு தயாரான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’.. முக்கிய அறிவிப்பு வெளியீடு !

prince

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரின்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘டான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிரடியாக வெளியான திரைப்படம் ‘பிரின்ஸ்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. 

prince

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரிட்டிஷ் பெண்ணுக்கும், இந்திய பையனுக்கும் இடையேயான காதல் கதையை ஜாலியாக சொல்லியிருந்தார் இயக்குனர் அனுதீப். 

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி டிஸ்னிப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Share this story