சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்... வேற லெவல் அப்டேட்

sivakarthikeyan

சூப்பர் ஹிட் இயக்குனருடன் நடிகர் சிவகார்த்திகேயன் விரைவில் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. அதனால் அடுத்தடுத்த படங்களை வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் பணியாற்றி வருகிறார். 

sivakarthikeyan

அந்த வகையில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் உருவாகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் சம்மருக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு எந்த இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

sivakarthikeyan

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்‌. தீனா, ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசியாக அவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை இயக்கினார். அந்த படம் போதிய வெற்றியை பெறாத நிலையில் அதன்பிறகு எந்த படமும் இயக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story