உதயநிதியை சந்தித்த நடிகர் சங்கத்தினர்.. அமைச்சரானதற்கு வாழ்த்து !

nadigar sangam

 அமைச்சர் உதயநிதிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். 

 தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்த உதயநிதி, கடைசியான ‘மாமன்னன்’ நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் கடந்த மாதம் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சரானார். தற்போது அரசு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

nadigar sangam

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதியின் அலுவலகத்திற்கு சென்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், அவரது வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது நடிகர் சங்கர் தலைவர் நாசர், பூச்சி முருகன், நடிகைகள் சச்சு, லதா உள்ளிட்டோர் இருந்தனர். 

nadigar sangam

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் பொறுப்பேற்றதன் காரணமாய் இளைஞர்கள் மேல்தளம் நோக்கி முன்னேறவும் விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் தங்கப்பதக்கள் குவித்திட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் செய்வர் என நம்பிக்கை பிறக்கிறது. 

தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்வளர்ச்சிக்கு ஆதரவையும், பங்களிப்பையும் நல்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 

nadigar sangam

Share this story