தென்னிந்திய சினிமாவில் இனி இவர் டாப்... உற்சாகமான ரசிகர்கள் !

twitter

 தென்னிந்திய சினிமாவில் நடிகர் மகேஷ் பாபு அதிக பாலோயர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சினிமாவில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சினிமா திரைப்படங்களின் அப்டேட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலமே பகிரப்பட்டு வருகிறது. அதனால் தான் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் கூட சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. 

twitter

குறிப்பாக ட்விட்டரின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ், ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவான நடிகராக இருக்கிறார். அதனால் ட்விட்டரில் 13 மில்லியன் பாலோயேர்களை பெற்று தென்னிந்தியாவில் டாப் நடிகராக மகேஷ் பாபு உள்ளார். 

twitter

இதையடுத்து நடிகர் தனுஷ் 11.1 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்திலும், நடிகர் சூர்யா 8.3 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இடத்திலும், நடிகர் கமல்ஹாசன் 7.5 மில்லியன் பாலோயர்களுடன் 4வது இடத்திலும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் 7.2 பாலோயர்களுடன் 5வது இடத்திலும், நடிகர் ரஜினிகாந்த் 6.2 மில்லியன் பாலோயர்களுடன் 6வது இடத்திலும், நடிகர் விஜய் 4 மில்லியன் பாலோயர்களுடன் 7வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story