பழிவாங்கும் த்ரில்லர் படத்தில் சுனைனா... 'ரெஜினா' ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் சுனைனாவின் 'ரெஜினா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகை சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரெஜினா'. பழி வாங்கும் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை டோமின் டி.சில்வா என்பவர் இயக்கியுள்ளார்.
எல்லோ பியர் புரொடக்ஷன் மற்றும் எல்எல்பி நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகி வெளியாக உள்ளது. சாதாரண குடும்பப் பெண்ணாக கதாநாயகி, காணாமல் போன தனது கணவனை தேடி வருகிறார். அப்போது ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் துப்பாக்கியுடன் மிரட்டும் வகையில் இருக்கும் சுனைனாவின் லுக் வரவேற்பை பெற்றுள்ளது.