சந்தானத்துடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர் சி... உறுதியானதி 'அரண்மனை 4'

aranmanai 4

நடிகர் சந்தானத்துடன் இயக்குனர் சுந்தர் சி இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  ‌

aranmanai 4

 ஹாரர் மற்றும் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவராக இருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. அரண்மனை சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக ஹாரர் படங்களில் பயமுறுத்தும் த்ரில்லர் காட்சிகள் மட்டும் இருக்கும். ஆனால் சுந்தர் சி படங்களில் ஹார்ர் காட்சிகளுடன் காமெடியும் கலந்திருக்கும். அந்த வகையில் வெளியான அரண்மனை அடுத்தடுத்த படங்கள் வெற்றியை பெற்றது. 

aranmanai 4

இந்த படங்களுக்கு பிறகு ரொமான்ஸ் காமெடியில் உருவான 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'அரண்மனை 4' படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகளில் சுந்தர் சி ஈடுப்ட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது. 

aranmanai 4

இந்நிலையில் நடிகர் சந்தானமும், இயக்குனர் சுந்தர் சியும் இணைந்து தங்களது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில் முக்கியமாக நடிகர் விஜய் சேதுபதி கலந்துக்கொண்டார். அதோடு லைக்காவின் செயல் அதிகாரி திருக்குமரனும் பங்கேற்றார். இது 'அரண்மனை 4' படத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நமக்கு வந்த தகவலின்படி 'அரண்மனை 4' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். லைக்கா தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். 

Share this story