நவரச நாயகன் கார்த்திக்குடன் இணையும் சன்னி லியோன்.. ‘தீ இவன்’ புதிய அப்டேட் !

sunny leone

நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘தீ இவன்’ படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் இணைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவில் ஒதுங்கியிருந்த அவர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.  அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘தீ இவன்’. 

sunny leone

இந்த படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து சுகன்யா, ராதாரவி, சுமன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

sunny leone

இந்நிலையில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், அதன்பிறகு வீரமா தேவி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

 

Share this story