சன்னி லியோனின் அசத்தல் நடனத்தில் 'கண்ணாடி கண்ணால'... 'ஓ மை கோஸ்ட்' பாடல் வெளியீடு !

oh my ghost

'ஓ மை கோஸ்ட்' படத்திலிருந்து 'கண்ணாடி கண்ணால' என்ற பாடல் வெளியாகி உள்ளது. 

 பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. அந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் காமெடி நடிகர்கள் சதிஷ், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

oh my ghost

இவர்களுடன் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜீஷ் அசோக் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரர் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். 

oh my ghost

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து டீசர் மற்றும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து 'கண்ணாடி கண்ணால' என்ற வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சன்னி லியோனின் அசத்தலான நடனத்தில் உருவான இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  

Share this story