ராணியாக அசத்தும் சன்னி லியோன்... அடால்ட் காமெடியில் 'ஓ மை கோஸ்ட்' டிரெய்லர் !

sunny Leone

சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

பாலிவுட்டில் கிளாமரில் கலக்கி வரும் சன்னி லியோன், முதல்முறையாக தமிழ் படம் ஒன்றில் நடித்துள்ளார். 'ஓ மை கோஸ்ட்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை யவன் என்பவர் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க அடால்ட் காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சன்னி லியோன் நடித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

sunny Leone

இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் காமெடி நடிகர்கள் சதிஷ், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜீஷ் அசோக் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

sunny Leone

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சன்னி லியோன் கலந்துக்கொண்டார். அப்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாரர் காமெடியில் உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

Share this story