நவரச நாயகன் பட டீசரை வெளியிடும் சன்னி லியோன்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

TheeIvan

நவரச நாயகன் கார்த்திக் பட டீசரை நடிகை சன்னி லியோன் வெளியிடவுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீ இவன்’. டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வரும் இப்படத்தில் நீண்ட நாள் கழித்து கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகும் இப்படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.  

TheeIvan

இந்த படத்தில் நடிகை சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, இயக்குனர் சரவண சக்தி, உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அலிமிர்சாக் இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றுள்ளது. 

TheeIvan

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசரை பிரபல நடிகை சன்னி லியோன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story