சூப்பர் ஸ்டார் படத்தில் சூர்யா பட நடிகை..
ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் சூர்யா பட நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அண்ணாத்த’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியின் 169வது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
தற்போது இந்த படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகளை நெல்சன் செய்து வருகிறார். இன்னும் இரு மாதங்களில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடும் படலமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.