சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட வாய்ப்பு.. தட்டி தூக்கிய சூப்பர் ஹிட் இயக்குனர் !

rajini

 ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் வாய்ப்பு முன்னணி இயக்குனர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால்சலாம்‘ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 

rajini

இந்த இரண்டு படங்களை முடித்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ‘டான்‘ படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி ஏற்கனவே ரஜினியின் 170வது படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியை சந்தித்த சிபி சக்ரவர்த்தி கதை குறித்து சில முறை விவாதித்துள்ளார். ஆனால் சிபி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தியில்லை என்பதால் புதிய கதையை தயார் செய்து வரும்படி கேட்டிருக்கிறார். 

rajini

தற்போது ரஜினிக்கு ஏற்ற கதையை சிபி சக்ரவர்த்தி தயார் செய்துக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது சூப்பர் ஹிட் இயக்குனரான பி.வாசுவிற்கு படம் இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் ரஜினி. தற்போது ‘சந்திரமுகி 2’ படத்தை இயக்கி வரும் பி.வாசு, விரைவில் சூப்பர் ஸ்டாரை இயக்குவார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. 

Share this story