மீண்டும் உருவாகிறதா சூர்யாவின் ‘இரும்புக்கை மாயாவி’... ரகசியத்தை உடைத்த லோகேஷ் கனகராஜ் !

irumbukai mayavi

சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த ‘இரும்புக்கை மாயாவி’ ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து புதிய விளக்கத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் சூப்பர் டூப்பர் இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார். 

irumbukai mayavi

தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

இந்நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை கைவிட்டது ஏன் என்ற விளக்கத்தை லோகேஷ் கனகராஜ் அளித்துள்ளார். அதன்படி, ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் செய்யும்போது படத்தை இயக்குவதற்கான தைரியம் இல்லாததது போல் உணர்ந்தேன்.

irumbukai mayavi

அதனால் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கூறி, தற்போதைக்கு இப்படத்தை இயக்க இயலாது என்றும், சில படங்களை இயக்கி முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குகிறேன் என்கிறேன். அவரும் சரி என சொன்னதால் படத்தை கைவிட்டதாக லோகேஷ் கனகராஜ் கூறினார். லோகேஷ் கனகராஜின் இந்த பதிலால் மீண்டும் சூர்யா நடிப்பில் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

Share this story