மலையாள சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா ? .... மிரட்டலான அப்டேட்

suriya

 பிரபல மலையாள இயக்குனர் இயக்கத்தில் விரைவில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. தமிழை தாண்டி மலையாளத்திலும் குறிப்பிடத்தக்க ரசிகர்களை வைத்துள்ளார். அதனால் இவரது திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேநேரம் தமிழ் ஹீரோக்கள் மற்ற மொழி இயக்குனர்களுடன் இணைய அதிக விருப்பம் காட்டி வருகின்றனர். 

suriya

அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனராக இருப்பவர் லியோ ஜோஸ். இவர் சமீபத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஒரு வித்தியாசமான கதை ஒன்றை சூர்யாவிடம் கூறியுள்ளார். அந்த கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துவிட்டதால் விரைவில் கால்ஷீட் தருவதாக கூறியுள்ளார். அதனால் சூர்யா - லியோ ஜோஸ் கூட்டணி படத்தின் அறிவிப்பை விரைவில் எதிர்பார்கலாம். 

suriya

மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை லியோ ஜோஸ் இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள மம்மூட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story