ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள எண்டு கார்டா!....- கொண்டாட்டத்திற்கு பால் ஊற்றிய தமிழ்நாடு அரசு.

photo

துணிவு, வாரிசு படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் நாளைய தினம் vibe  செய்யாலாம் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிக்கை மூலமாக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

photo

இன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. இதற்கான முன் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தநிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  “வரும் 13,14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு அதிகாலை 4 மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”

photo

அதுமட்டுமல்லாமல் திரையரங்கின் முன் பிரம்மாண்ட பேனர் வைப்பது, பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது என எதற்கும் அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து  திரைப்பட டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிக விலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள்  புகார் அளிக்கும் வகையில் டிக்கெட்டிற்கு பின்பக்கத்தில் உயர் அதிகாரிகள் பெயர், பதவி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் அச்சிடப்பட வேண்டும்என தமிழ அரசு திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே அதிகாலை ஷோவிற்கு டிக்கெடுகள் முன்பதிவு செய்த நிலையில் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

photo

Share this story