கொடைக்கானலில் விறுவிறுப்பாக படமாகும் ‘தளபதி 67’.... ஆனா விஜய் மிஸ்ஸிங் ?

thalapathy 67

‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ளார். ‘தளபதி 67’ என்ற தற்காலிகமாக  அழைக்கப்படும் இப்படத்தை மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித் குமார் தான் தயாரித்து வருகிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

thalapathy 67

இந்தப் படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாகிறது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

thalapathy 67

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதில் மிஷ்கின் மற்றும் சாண்டி இடையேயான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story