தளபதின்னா அது விஜய் தான்.. நான் வெறும் விஷால் !
தளபதி என்றால் அது நடிகர் விஜய் மட்டும் தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் போலீசாக நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த டிரெய்லர் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய விஷாலிடம் புரட்சித்தளபதி என்று உங்களை அழைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் தளபதி என்றால் அது விஜய் மட்டும் தான் நான் வெறும் விஷால் தான் என்று கூறினார்.

