‘ராஜாகிளி’ டப்பிங்கை தொடங்கிய தம்பி ராமையா.. விரைவில் வெளியிட திட்டம் ?

rajakili

 தம்பி ராமையா மகன் இயக்கும் ‘ராஜாகிளி’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கும் திரைப்படம் ‘ராஜாகிளி’. இந்த படத்திற்கு தனது மகனுடன் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை தம்பி ராமையா கவனித்துள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

rajakili

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தினேஷ் இசையமைக்கவுள்ளார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

rajakili

சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இப்படத்தின் டப்பிங் இன்று தொடங்கியது. பிரபல ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த டப்பிங் பணிகளில் தம்பி ராமையா ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story