"இதை விட மகிழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடையாது" - நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி!!

tn

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு  நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ttn

பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்களின் வரலாற்றை பறைசாற்றிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன்  திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படத்தில் நடித்த நடிகர்களின் அர்ப்பணிப்பு தான் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்று கூறலாம் . அந்த அளவிற்கு வந்திய தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழி தேவன், ஆழ்வார்கடியன், பெரிய பழுவேட்டரையர் , சின்ன பழுவேட்டரையர், சுந்தர சோழர், நந்தினி ,குந்தவை என ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும்படியாக உள்ளது.  நடிகர்கள் கார்த்தி ,விக்ரம், ஜெயம் ரவி ,ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் ,ஐஸ்வர்யா ராய் ,த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி என ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.  குறிப்பாக விக்ரம் படத்தில் தனது அசாத்திய நடிப்பையும் , உடல்மொழியையும்  வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ள நிலையில் நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி. நான் நிறைய கதாபாத்திரங்கள் நடித்துள்ளேன்; ஆனால் இந்த படத்தை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் நன்றி. இதை விட மகிழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடையாது. அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி” என்று கூறியுள்ளார். 

Share this story