‘துணிவு படத்தை பார்த்துவிட்டுதான் துணிந்து இப்படி செய்தேன்’ –அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த வங்கி கொள்ளையன்.

photo

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 11அம் தேதி வெளியாகி ரசிகர்களில் பேராதரவை பெற்ற திரைப்படம் ‘துணிவு’. எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்தார். வங்கி கொள்ளையை மைய்யமாக வைத்து தயாரான இந்த படத்தில், அஜித் ஒரு பிரபலமான வங்கியை துப்பாக்கி முனையில் கடத்தில் மக்களின் ஹீரோவாகவும், கதைபடி நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருந்தார்.

photo

இந்த நிலையில் துணிவு பட பாணியில் திண்டுக்கல் மாவட்டம் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த 25 வயதான இளைஞர் கலில் ரகுமான் தாடிக்கொம்பு சாலையில் உள்ள  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்து போலீஸ்ஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார். அந்த இளைஞர் பணியில் இருந்த 4 வங்கி ஊழியர்களையும் கட்டி வைத்து மிளகாய்பொடி மற்றும் ஸ்பிரே அடித்து வங்கியில் கொள்ளை யடிக்க முயற்சி செய்த சமயத்தில், ஒரு ஊழியரின் கூச்சல் சத்தம் கேட்டு வங்கிக்குள் ஓடி வந்த வாடிக்கையாளர்கள் சேர்ந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

photo

விசாரணையில் அந்த இளைஞர் அதிர்ச்சி வாக்கு மூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது “ சமீபத்தில் வெளியான துணிவு படத்தை பார்த்து தான், கொள்ளையில் ஈடுபட்டதாகவும், வங்கியை கொள்ளையடித்து குறுகிய காலத்தில் செட்டில் ஆகிவிடலாம் என எண்ணிதான் இப்படி செய்ததாகவும்’ அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். 

photo

Share this story