வெளியானது ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்..

 varisu

வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.  

தெலுங்கு  இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு.  இந்தப்படம் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார்.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் இந்தப் படத்தில்,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா   உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு  பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இதனையொட்டி வாரிசு படத்தை   எதிர்ப்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கின்றனர்.  இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.  

varisu
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்  வெளியிட திட்டமிட்ட படக்குழு,  முதல் பாடலுக்கான ப்ரோமோவை கடந்த 3ம் தேதி மாலை  6.30 மணிக்கு வெளியிட்டது. ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ எனத்தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  ப்ரோமோ வீடியோ வெளியான  26 நிமிடங்களில்  1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில்  இந்தப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் இன்று மாலை 5. 30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.   அதன்படி,  வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே முழு பாடல் வெளியாகியுள்ளது. ப்ரோமோ வீடியோ பேலவே பாடல் வெளியான 27 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை இந்தப் பாடல் பெற்றுள்ளது.  இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share this story