பா ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் குறித்த அப்டேட்!
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் கதாபாத்திரங்கள் நாளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பா. ரஞ்சித் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். பா ரஞ்சித் படங்கள் என்றாலே அதில் அரசியல் கருத்துக்கள் இல்லாமல் இருக்காது. இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் தனது சித்தாந்தங்களை அழுத்தமாக பதிவு செய்திருப்பார். எனவே அவரது இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் பா. ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கலையரசன், ஹரி கிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லாரக்கல் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டென்மா இசையமைப்பாளராகவும், முரளி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதாபாத்திரங்கள் நாளை மாலை 6 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் LGBTQ சமூகத்தின் கொடியும் இடம் பெற்றுள்ளது. எனவே படத்தில் அந்தக் கதைக்களத்தையும் எதிர்பார்க்கலாம்!

