‘வாரிசு’ போஸ்டர்ல இத்தனை விஷயம் இருக்கா!......தில் ராஜுவின் மாஸ்டர் பிளான்.

photo

விஜய்யின் ‘வாரிசு’ படம் இம்மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என நேற்றய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் மறைமுகமாக படக்குழு ஒரு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

photo

அஜித், விஜய் படங்கள் என்றால அவர்களது ரசிகர்களுக்கு திருவிழாதான், அதுவும் இந்த வருடம் கேட்கவா….. வேண்டும், பல வருடம் கழித்து  கோலிவுட்டின் இருபெரும் தூண்கலான அஜித், விஜய் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ்ஸாக உள்ளது. படங்களின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர்கள் மும்முரமாக தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஒரு முறை நடந்த புரொமோஷின் விழாவில் ‘வாரிசு’ படத்தயாரிப்பாளர் தில்ராஜு , நடிகர் விஜய்தான் No.1  எனறு கூறினார். இந்த விஷயம் அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

photo

இந்த நிலையில் தற்போது வெளியான ரிலீஸ் தேதி போஸ்டரில் பட வெளியீடு JAN.11 என தெரிவித்துள்ளனர். அதில் மறைமுகமாக N.1 என குறிப்பிட்டு, விஜய்தான் நம்பர் 1 என சொல்லாமல் சொல்லியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

Share this story