"ராஜராஜ சோழன் காலத்தில் இந்து இல்லை" - நடிகர் கமல்ஹாசன் அதிரடி பேட்டி!!

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல மாலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் மற்றும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து படத்தை கண்டு களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் , தமிழ் சினிமாவின் ரசிகனாக ,தயாரிப்பாளராக ,இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் அளித்துள்ளார்கள் என்பது போக இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நாம் என்றதுடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கிறார்கள். பல நடிகர்கள் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதை இவர்கள் செய்துள்ளனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மலைப்பு , கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
தமிழ் சினிமாவிற்கு நூறு வயது. எனக்கு 67 , இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ராஜ்கமல் ஃபிலிம் சீன் படமாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் இன்று இல்லை. இது எங்கள் தமிழ் படம்; இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது எனக்கு சந்தோஷம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " இந்து மதம் என்கின்ற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர். எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்தது. அதையெல்லாம் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரன் என்பவர் சன்மத ஸ்தாபனம் எனக் கொண்டு வருகிறார். சரித்திரம் இதெல்லாம் சரித்திரம். இந்த சரித்திரத்தை இப்பொழுது கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் இது சரித்திர புனவை பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம் என்றார்.