தனுஷ் இல்லன்னா.. அனிரூத் இல்லை.. பழைய நட்பு மீண்டும் துளிர்கிறதா ?
தனுஷ் இல்லையென்றால் அனிரூத் கிடையாது என்று அனிரூத் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிரூத் இசையமைத்துள்ளார். அதனால் இப்படத்தின் பாடலுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்த்ததை போன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் விரைவில் வெளியாவதையொட்டி ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய அனிரூத், டிஎன்ஏ கூட்டணியில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால் ட்விட்டரிலும் டிஎன்ஏ என்று வைரலாகி வருகிறது. அந்த ‘டி’ இல்லன்னா இந்த ‘ஏ’ இல்லை என்று குறிப்பிட்டார். அதாவது அனிரூத்தால் மட்டுமே இந்த வெற்றி கிடைக்கவில்லை. தனுஷால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று தன்னடக்ககத்துடன் அனிரூத் கூறுகிறார். அனிரூத்தின் இந்த பேச்சு தனுஷூடன் மீண்டும் நட்பு துளிர்கிறதா என்று கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

