அனுமதியின்றி வெளியான ‘துணிவு’, ‘வாரிசு’ திரைப்படங்கள்... திரையரங்குகளுக்கு நோட்டீஸ் !

thunivu vs varisu

துணிவு மற்றும் வாரிசு படத்தின் நள்ளிரவு காட்சிகள் அனுமதியின்றி வெளியானதால் அந்த திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

பொங்கலை பண்டிகையையொட்டி கடந்த 11-ஆம் தேதி அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பை உள்ளது. ரசிகர்கள் இந்த படங்களை கொண்டாடி வருகின்றனர். 

thunivu vs varisu

இதற்கிடையே துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கும் 11,12,13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் மட்டும் காலை 9 மணிக்கு  ஒரு சிறப்பு காட்சி திரையிடவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் கடந்த 11-ஆம் தேதியன்று நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் அனுமதியின்றி திரையிடப்பட்டன. 

இந்நிலையில் அனுமதி அளித்த நேரத்தை தவிர்த்து கடந்த 11-ஆம் தேதியன்று 1 மற்றும் 4 மணிக்கு இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளது. அதனால் இந்த நேரங்களில் திரையிட்ட மதுரையை சேர்ந்த 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story