‘துணிவு’ மாபெரும் வெற்றி.. சபரிமலைக்கு சென்ற எச் வினோத் !

h vinoth

‘துணிவு’ வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார். 

‘சதுரங்கவேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். முதல் படமே வெற்றிமானதை அடுத்து ‘தீரன் அதிகாரம்’, நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து தற்போது ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார். 

h vinoth

இந்த படம் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வசூலையும் குவித்து வருகிறது. இந்த படத்தின் வெற்றி படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் ‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த இயக்குனர் எச் வினோத், தற்போது சபரிமலைக்கு சென்றுள்ளார். பக்தர்களோடு பக்தராக சபரி மலைக்கு செல்லும் எச் வினோத் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆன்மீகம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை சமீபத்திய பேட்டியில் எச் வினோத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


 

Share this story