‘துணிவு’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்.. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு !

அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு தணிக்கைத்துறை சான்றிதழ் வழங்கியுள்ளது.
அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதை கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். சமீபத்தில் இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியான நிலையில் நேற்று முன்தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
டிரெய்லர் வெளியான அன்று சமூக வலைத்தளங்களை தெறிவிட்டனர் ரசிகர்கள். தற்போது இந்த டிரெய்லர் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்றே கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தணிக்கைத்துறைக்கு அனுப்பட்டது. அங்கு படத்தை பார்த்த அதிகாரிகள் ‘துணிவு’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘துணிவு’ படத்திற்கு தணிக்கை துறை அனுமதி வழங்கிவிட்டதால் திரையரங்கில் வெளியிடும் பணிகளில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.