தாறுமாறாக வரப்போகுது ‘துணிவு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.. ஜிப்ரான் கொடுத்த சூப்பர் அப்டேட் !

thunivu

‘துணிவு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்து முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். 

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்ற போதிலும் தற்போது பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் ப்ரோமோ பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

thunivu 

இதற்கிடையே விஜய்யின் ‘வாரிசு’ படத்திலிருந்து சமீபத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. அதனால் ‘துணிவு’ படத்தின் சில்லா சில்லா பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர். பாடலாசிரியர் வைசாக் எழுதிய இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளதாக பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 

thunivu

‘துணிவு’ படத்தின் பாடல்கள் ஜிப்ரான் இசையில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரானை இயக்குனர் எச் வினோத் சந்தித்து பேசினார். அப்போது ‘துணிவு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜிப்ரான், நானும், எச் வினோத்தும் ஆலோசனை நடத்தினோம் என்று கூறியுள்ளார்.  
 

Share this story