‘துணிவு’ படத்தை வெளியிடும் ‘வாரிசு’ தயாரிப்பாளர்... புதிய ட்விஸ்டா இருக்கே !

thunivu

 அஜித்தின் ‘துணிவு’ படத்தை ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனமும் கைப்பற்ற்றியுள்ளது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்து வருகிறது லைக்கா நிறுவனம். அதேபோன்று இப்படத்தின் டிரெய்லரை துபாயில் உள்ள உயர்ந்த கட்டிடத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

thunivu

இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘Thegimpu‘ என்ற தலைப்பில் வெளியாகிறது. இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள விசாகப்பட்டினம் மற்றும் நிஜாம் பகுதி வெளியிட்டு உரிமையை ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளாராம். இதற்கிடையே தமிழில் விஜய் தான் நெம்பர் 1 என்று கூறி சர்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story