வேற லெவல் செல்லவிருக்கும் ‘துணிவு’ டிரெய்லர்... உலக சாதனையால் ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள் !

ajith

 அஜித்தின் துணிவு டிரெய்லர் உலக அளவில் சாதனை படைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லரை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர். 

ajith

வங்கிக் கொள்ளை கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் நடிகர் அஜித், வில்லன் மற்றும் ஹீரோ என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவே தெரிகிறது. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லரிலும் நடிகர் அஜித் துவம்சம் செய்கிறார். 

இந்நிலையில் ‘துணிவு’ படத்தின் டிரெய்லர் உலக சாதனை ஒன்றை படைக்கவிருக்கிறது. அதாவது புத்தாண்டு பிறப்பதையொட்டி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் உள்ள சிட்டி சென்டரில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட உள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால் உலக அளவில் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்திய அளவில் முதல்முறையாக இப்படியொரு தொழிற்நுட்பத்தில் டிரெய்லர் வெளியிடப்படுவது பெருமையாக கருதப்படுகிறது. 

 

 

Share this story