திருடன்.. போலீஸ்.. ‘துணிவு’ டிரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள் !

ajith

 துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

எச் வினோத் இயக்கத்தில் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

ajith

இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரில் வெறித்தனமான இருக்கிறார் நடிகர் அஜித். வங்கிக் கொள்ளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் திருடன், போலீஸ் என இரண்டு கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளதாக தெரிகிறது.

ajith

இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் வெளியீட்டையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த டிரெய்லர் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

Share this story