ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ள உதயநிதி... ‘கலகத்தலைவன்’ டிரெய்லர் வெளியீடு !

KalagaThalaivantrailer

 உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கலகத்தலைவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

சினிமாவில் ஆரம்பக்காலத்தில் காதல் மற்றும் காமெடி திரைப்படங்களில் நடித்து வந்தார் உதயநிதி. இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றிக்கு சமீபகாலமாக ஆக்ஷன் ரூட்டிற்கு மாறியுள்ளார் உதயநிதி. அந்த வகையில் உருவான ‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

KalagaThalaivantrailer

அந்த வரிசையில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத்தலைவன்’. ‘தடம்’ படத்தின் மூலம் பிரபலமான மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. 

KalagaThalaivantrailer

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக உதயநிதி மாறியுள்ளது தெரிகிறது. ரத்தம் தெறிக்க உருவாகியுள்ள இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story