நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா... வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம் !

vikram

 நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது. 

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நீண்ட கால குடியுரிமையை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது. ‘கோல்டன் விசா’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விசா 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். ஏற்கனவே இந்த விசா புகழ்பெற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

vikram

அந்த வகையில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பார்த்திபன், சிம்பு, நாசர், அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், திரிஷா, மீனா ஆண்ட்ரியா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகரான விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. விக்ரமுடன் இணைந்து நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலிக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை முடித்துள்ள விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story