‘பத்தல பத்தல’ செம குத்தா இருக்கு... பட்டையை கிளப்பும் ஆண்டவர் டான்ஸ் !
விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தற்போது படத்தை வெளியிடுவதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரும் மே 15-ஆம் தேதி ‘விக்ரம்’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. முழு நீள ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் அனிரூத் இசையில் உருவாகியுள்ள முதல் பாடலான பத்தல பத்தல என்று தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கமலே எழுதி, பாடியுள்ளார். கமல் செம குத்து போடும் இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். பட்டையை கிளப்பும் இந்த பாடலில் சென்னை வெள்ளம் உள்ளிட்ட பல அரசியல் விஷயங்களின் நெடி வீசுகிறது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

