விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் வெளியான ‘கடைசி விவசாயி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்தை ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நல்லாண்டி என்ற முதியவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வென்றார். இவர்களுடன் யோகி பாபு, பசுபதி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இப்படம் பபேசியுள்ளது.. இப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 11-ம் தேதி இந்தப் படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

