ஷங்கரை மீண்டும் வம்புழுக்கிறாரா வடிவேலு... சர்ச்சையை கிளப்பியுள்ள ‘அப்பத்தா’ பாடல் !

Naai Sekar Returns

அப்பத்தா பாடல் மூலம் ஷங்கரை மீண்டும் வடிவேலு வம்புழுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நகைச்சுவை அரசனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. ‘24-வது புலிகேலி’ படத்தின் போது ஷங்கருக்கும், வடிவேலுவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்தார். 

Naai Sekar Returns

கடந்த சில மாதங்களுக்கு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு லைக்கா தயாரிப்பில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வித்தியாசமான காமெடி கதைக்களம் கொண்ட இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

Naai Sekar Returns

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடிய ‘அப்பத்தா’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிகள் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஷங்கரை தாக்கும் விதமாக உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த பாடலில் நான் உண்டு என் வேலை உண்டு இருந்தேன். டாக்ஸால அந்த வாய்ப்பை இழந்தேன். சில நாயாள சீக்காலி ஆனேன் என்று வடிவேலு பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

 

Share this story