ரசிகர்களை மிரட்ட வரும் வடிவேலு... ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

NaaiSekarReturns

வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பிற்கேற்றாற் போல் நாய்களின் கதைக்களம் கொண்டதாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

NaaiSekarReturns

இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. 


 

Share this story